தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்காத அட்டைகள் மற்றும் போலி முகவரிகளில் பெறப்பட்ட அட்டைகளை கண்டறிந்து அவற்றை நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்தச் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அறிக்கையின் படி 2025 இல் சுமார் 4 கோடி போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் அரசு பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி அனைத்து அட்டைதாரர்களுக்கும் e-KYC கட்டாயம். ஆதார் இணைப்பு அவசியம். இணைக்கப்படாத அட்டைகள் 2026 மார்ச் 31-க்குள் செயலிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உங்கள் ரேஷன் கார்டு ரத்தாகாமல் இருக்க, தகுதியான காரணங்கள் இன்றி தொடர்ந்து பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சரியாகப் புதுப்பிக்காதவர்கள் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் அட்டைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டையின் செயல்பாட்டை உறுதி செய்துகொள்ள அந்தந்தப் பகுதி வட்ட வழங்கல் அலுவலகத்தையோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ அணுகி சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…
ஈரானின் உச்ச தலைவராக சுமார் 35 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க…