அடம்பிடித்த தயாரிப்பாளர், நீங்க முதல்ல 18 கோடியை எடுத்து வைங்க…கறாராக பேசிய இயக்குனர் – எல்ஐகே படம் ரிலீஸ் தள்ளிப் போக இதுதான் காரணமா?

By Elango on மார்கழி 11, 2025

Spread the love

எஎல்ஐகே படம் வருகிற 18ம் தேதி வெளியாகாமல் தள்ளிப் போய்விட்டது. இதற்கான காரணங்கள் இப்போது தெரிய வந்துள்ளது. எல்ஐகே படத்தை மொத்தம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க தயாரிப்பாளர் லலித்குமார் திட்டமிட்டார். அந்த வகையில் இதுவரை 60 கோடி ரூபாய் வரை தந்துவிட்டார்.அவரது தரப்பில் இன்னும் 5 கோடி ரூபாய் மட்டுமே தர வேண்டியுள்ளது.

ஆனால் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை உருவாக்க மேலும் 18 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகி விட்டது. அந்த 18 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளருக்கு அவர் நெருக்கடி தந்திருக்கிறார். அந்த விவகாரம்தான் இந்த படம் தள்ளிப் போக காரணம் என்கின்றனர். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனே எல்ஐகே படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை 16 கோடி ரூபாய் விலை பேசி தயாரிப்பாளர் லலித்குமாரிடம் வாங்கியிருக்கிறார்.

   

படம் ரிலீஸாகும் நேரத்தில் தனக்கு நிறைய செலவுகள் இருப்பதால் அந்த 16 கோடி ரூபாயை உடனே தருமாறு விக்னேஷ் சிவனிடம் தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார். எல்ஐகே படத்தை ஏதேனும் ஒரு ஓடிடி நிறுவனத்துக்கு விலைபேசி விற்ற பிறகுதான் அவர்கள் தரும் பணத்தை வாங்கி உங்களுக்கு தர முடியும். அதற்கு முன் நான் பணம் தர முடியாது என்று லலித்குமாரிடம் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த பஞ்சாயத்துகளால்தான் எல்ஐகே படம் ரிலீஸ் தள்ளிப் போனதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.