கட்டுன பொண்டாட்டி பெத்த குழந்தைங்க மட்டுமில்லே… இனி எனக்கு பெத்தவங்களும் வேண்டாம் – நெருங்கிய தோழிக்காக குடும்பத்தையே தூக்கி வீசிய நடிகர் ரவி மோகன்!

By Elango on மார்கழி 11, 2025

Spread the love

தனது நெருங்கிய தோழி கெனிஷாவுக்காக தனது மனைவி ஆர்த்தி மற்றும் தனது 2 பிள்ளைகளை விட்டு விலகிச் சென்ற நடிகர் ரவி மோகன், இப்போது தனது குடும்பத்தையே நிராகரிக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். சமீபத்தில் ரவிமோகனின் தந்தை எடிட்டர் மோகன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிங்கப்பூரில் இருந்த அவரது இளைய மகன் நடிகர் ரவிமோகனுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.அப்போது, நீ மட்டும் அப்பாவை பார்க்க வா, கெனிஷாவுடன் வர வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். கெனிஷா இல்லாமல் வர மாட்டேன் என்று தனது அப்பாவை நேரில் வந்து பார்க்காமல் நடிகர் ரவிமோகன் தவிர்த்து விட்டார்.

அதே போல் ரவிமோகனின் தங்கை மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இந்த விழாவுக்கு கெனிஷா இல்லாமல் தனியாக நீ மட்டும் வா என்று குடும்பத்தினர் ரவிமோகனை அழைத்துள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கும் வராமல் நடிகர் ரவிமோகன் புறக்கணித்து விட்டார். இப்படி கெனிஷாவுக்காக மனைவி, பிள்ளைகள் மட்டுமின்றி இப்போது தனது பெற்றோர், சொந்த உறவுகளையும் அவர் நிராகரித்திருக்கிறார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.