தற்போது அனைவருமே மொபைல் போன் இல்லாமல் இருப்பதே இல்லை. மனிதர்களிடம் பேசுவதை தவிர்த்து விட்டு மொபைல் போனில் தான் மூழ்கியுள்ளார்கள். நாம் மொபைல் போனை இயக்குகிறோம் என்று சொல்வதற்கு பதிலாக மொபைல் போன் நம்பலை இயக்குகிறது என்றுச் சொல்லலாம். நிறைய பேர் மொபைல் போன் கவருக்குள் பணம் மற்றும் ஏடிஎம் கார்டு இது போன்றப் பொருட்களை வைக்கிறார்கள். பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இது மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டு வரும். மொபைல் போன் வெடித்து தீ பிடித்துள்ளது என்றுப் பல இடத்தில் கேள்விப்பட்டிருப்போம்.
நம்முடைய மொபைல் போன் ஜார்ஜ் செய்துவிட்டு ஆப் செய்யாமல் விட்டாலோ, நீண்ட நேரம் மொபைலை யூஸ் செய்தாலோ சூடாகும் இதுபோன்ற காரணமே மொபைல் போன் வெடிக்க வாய்ப்பு அதிகம். இதுபோன்று மொபைல் சூடாகும் போது நாம் வைக்கும் ஏடிஎம் கார்டு மூலம் காந்தப்புலம் ஏற்பட்ட ஆபத்தாக மாறுகிறது. அதேபோல் ரூபாய் நோட்டில் ரசாயனம் உருவாகி வெப்பத்தை வெளியேற விடாமல் மொபைல் போன் வெடிக்க வாய்ப்பு அதிகம். அதனால் மொபைல் போன் உபயோகிப்பவர்கள் இதுபோன்ற தவறானச் செயலை மறந்துக் கூடச் செய்து விடாதீர்கள்.
