சாப்பிட்ட பிறகு பலருக்கு நெஞ்சு எரிகிறது என்று சொல்வார்கள். அது என்னவென்றால் வயிற்றில் சுரக்கும் அமிலம் ஆனது உணவு குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடிய தான் நெஞ்சு எரிச்சல். இது சில உடல் உபாதைகளுக்கான அறிகுறி என்றும் கூறுவார்கள். நெஞ்சு எரிச்சல் எதனால் ஏற்படுகிறது அதை எப்படி சரி செய்வது வீட்டு வைத்திய முறையில் எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.
நாம் உண்ணும் உணவு குழாய் வழியாக வயிற்று பகுதியை சென்றடையும். உணவு குழாயின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் திறந்து மூடும் வடிவிலான தசைகள் இருக்கும். செரிமானத்தின்போது வெளியாகும் அமிலமானது உணவு குறைபாடு காரணமாகவோ இழப்பை அழற்சி காரணமாக மேல் நோக்கி அந்த அமிலம் பயணிக்க தொடங்கும். இந்த நிகழ்வின் போது உணவு குழாய் இரு பக்கங்களிலும் அமிலம் தேங்கி விடும். இதன் காரணமாக தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
பொதுவாக நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களாக சொல்லப்படுவது உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், நேரத்திற்கு சாப்பிடாமல் இருத்தல், மருத்துவரின் பரிந்துரை இன்றி எடுத்துக் கொள்ளும் மருந்துகள், அதிகப்படியான எண்ணெய் மசாலாக்கள் போன்றவை கொண்ட உணவுகளை உண்ணுவது நெஞ்சு எரிச்சல் ஏற்படுத்தும்.
தொடர்ந்து ஒருவருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது என்றால் அது கவனிக்கப்படக்கூடிய விஷயம்தான். அக்கறை எடுத்துக் கொள்ளாமல் நெஞ்செரிச்சலை விட்டு விட்டால் அதன் தொடர்ச்சியாக பித்தப்பை கட்டி, அல்சர், குடல் இறக்கம், இரைப்பை வாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, வயது மூப்பு ஆகியவற்றினால் ஏற்படும் நெஞ்சு வலியை சிலர் நெஞ்சு எரிச்சல் என்று தவறாக எண்ணிக் கொள்வது உண்டு. இது போன்ற பாதிப்பு உள்ளவர்கள் அவ்வப்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. பத்து நாட்களுக்கு மேலாக நெஞ்செரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
நெஞ்சு எரிச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றால் சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் இடைவேளை விட வேண்டும். அதிகமாக சாப்பிடக்கூடாது. நொறுக்கு தீனிகளை சாப்பிடக்கூடாது. பாதி வயிறு உணவும் மீதி தண்ணீருமாக இருக்க வேண்டும்.
நெஞ்சு எரிச்சலை வீட்டு முறையில் சரி படுத்துவது எப்படி என்பதை இனி பார்க்கலாம். ஒரு சிலர் நெஞ்செரிச்சல் வந்த உடனே ஜெலுசில் போன்றவற்றை எடுத்துக் கொள்வார்கள். இது தவறில்லை ஆனால் தொடர்ந்து அதை செய்யக்கூடாது. இது தவிர வெந்நீரில் சோம்பு கலந்து அருந்தினால் நெஞ்செரிச்சல் குணமாகும்.
வெல்லத்தில் பொட்டாசியம் மெக்னீசியம் உள்ளது. மெக்னீசியம் செரிமானத்துக்கு மிகவும் அவசியமானது. அதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் போது சிறிய வெள்ளைத்துண்டை வாயில் ஒதுக்கி மெல்ல மெல்ல அதன் சாற்றை பருகினால் நெஞ்செரிச்சல் குணமாகும். கருஞ்சீரகம் மருத்துவ குணம் வாய்ந்தது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தலாம். நெஞ்செரிச்சல் ஏற்படும் வேளையில் ஓமத் தண்ணீர் குடித்தாலும் உடனே சரியாகும்.