இயக்குனர் பிரேம்குமார் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு பிரேம்குமார் படங்கள் எடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகரான கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 35 கோடி ரூபாய்.
மெய்யழகன் திரைப்படத்தை சூரியா ஜோதிகாவின் டுடே என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . நேற்று திரையரங்குகளில் மெய்யழகன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெய்யழகன் திரைப்படத்தில் மாமன் மச்சான் இடையே இருக்கும் குறும்புத்தனம் பாசம், சண்டை, நட்பு ஆகிய விஷயங்களை அழகாக காட்டியுள்ளனர்.
குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் அளவுக்கு படம் அருமையாக இருக்கிறதாம். மெய்யழகன் திரைப்படத்திற்கு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர். இந்த நிலையில் 3 நாட்களில் மெய்யழகன் திரைப்படம் 16 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் மெய்யழகன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.