டெல்லி நரேலா பகுதியில் உள்ள ஜிம் வெளியே ஹரியானாவைச் சேர்ந்த பிரமோத் தஹியா என்ற சொத்து வியாபாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வியாழக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், ஸ்கூட்டரில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் அவரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடினர்.
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் தஹியா கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இக்கொலை மிரட்டல் மற்றும் மாமூல் கேட்டு நடக்கும் மிரட்டல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
https://twitter.com/IndiaToday/status/2095534030121054297/video/1
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
