“”மயக்கத்தில் கணவன்… அறையில் கேட்ட சத்தம்…” திருமணமான 13 நாட்களில் புதுப்பெண் செய்த காரியம்…. அழுது மன்னிப்பு கேட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 4, 2026

Spread the love

திருமணமான வெறும் 13 நாட்களிலேயே புதுப்பெண் ஒருவரின் அதிர்ச்சி தரும் கள்ளத்தொடர்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதுமனைவி தனது கணவனின் உணவில் ரகசியமாகத் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளார். உணவை உண்ட கணவன் சுயநினைவின்றி ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்ததும், அந்தப் பெண் நள்ளிரவில் தனக்கு அறிமுகமான கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

ஆனால், நள்ளிரவில் கணவனின் அறையிலிருந்து அறிமுகமில்லாத ஆண் குரல் கேட்பதை உணர்ந்த நாத்தனார் உடனடியாக விழித்துக்கொண்டு, தனது தந்தையை எழுப்பியுள்ளார். குடும்பத்தினரும் பக்கத்து வீட்டுக்காரரும் இணைந்து அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, கணவன் மயங்கிக் கிடப்பவதும், அந்த அறையில் வேறு ஒரு வாலிபன் அந்தப் பெண்ணுடன் இருப்பதும் தெரியவந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அந்த நபரைப் பிடித்து வைத்து, கணவனைத் தட்டி எழுப்பினர். நடந்த வஞ்சகத்தை அறிந்த கணவன் செய்வதறியாது மனமுடைந்து நின்றார். அந்தப் பெண் அழுகையுடன் மன்னிப்புக் கேட்டபோதிலும், கட்டிய கணவனையும் குடும்பத்தையும் ஏமாற்றிய அவரது செயல் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.