அடடே சூப்பர்…. நகைக்கடன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 21, 2026

Spread the love

பொதுமக்கள் மற்றும் எளிய மக்களின் அவசரத் தேவைகளுக்குப் பெரிதும் உதவக்கூடிய தங்கக் கடனுக்கான (Gold Loan) புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பின்படி, இனிமேல் கடன் தொகையின் அளவைப் பொறுத்து நகையின் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். அதன்படி, ₹2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு தங்கத்தின் மதிப்பில் 85% தொகையும், ₹2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு 80% தொகையும், ₹5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு 75% தொகையும் கடனாகக் கிடைக்கும்.

இந்த புதிய நடைமுறையில் மிகப்பெரிய நிம்மதியான விஷயம் என்னவென்றால், ₹2.5 லட்சத்திற்கும் குறைவாகத் தங்கக் கடன் வாங்குபவர்களுக்கு எவ்வித வருமான சான்றிதழோ (Income Proof) அல்லது சிபில் ஸ்கோர் (CIBIL Score) சரிபார்ப்போ தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் எவ்வித அலைச்சலும், தாமதமும் இன்றி தங்களின் அவசரத் தேவைகளுக்கு மிக எளிதாகக் கடன் பெற முடியும் என்பதால் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.