அடச்சீ உங்களுக்கே வெட்கமா இல்லையா?… திருமாவளவன் vs வைகோ… “விஜயை யார் தூக்கிப் பிடிப்பது?”… ஆர்.பி.உதயகுமார் கிளப்பிய புதுப் புயல்…!

By Nanthini on ஆடி 21, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசையும், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவெக கட்சிக்கு சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கொள்கை மாறுபாடு கொண்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தயவோடுதான் இன்று ஆட்சி அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பலவீனமான சூழலைப் பயன்படுத்தி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கியமாக, தமிழக முதல்வர் விஜயை யார் அதிகமாக தூக்கிப் பிடிப்பது என்பதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே பெரும் போட்டி நிலவுவதாக உதயகுமார் சாடியுள்ளார். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ ஆகிய இருவருக்கும் இடையே விஜயை ஆதரித்துப் பேசுவதில் முதலிடத்தைப் பிடிக்க கடும் சண்டை நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளும் முனைப்பில் இருக்கும் முதல்வரை, கூட்டணிக் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

அரசு நிர்வாகத்திற்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் குறித்துப் பேசிய அவர், தவெக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடையே அதிகாரம் யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவுவதாகக் கூறியுள்ளார். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ் மோகன் ஆகியோர் ஒரு அணியாகவும், அதிமுகவிலிருந்து சென்ற செங்கோட்டையன் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதுமட்டுமன்றி, தலைமைச் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு, முதல்வரின் நட்பு வட்டார ஆலோசகர்கள் குழு, நலம் விரும்பிகள் குழு எனப் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பதால் அரசு இயந்திரத்தில் முற்றிலும் ஒற்றுமையற்ற சூழலே நிலவுகிறது.

   

இத்தகைய உட்கட்சிப் பூசல்கள், கூட்டணிக் குழப்பங்கள் மற்றும் அதிகாரப் போட்டிகளின் காரணமாகத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பணிகளும் முடங்கிப்போயுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். முக்கியமாகப் பொதுமக்கள் அன்றாடம் அணுகும் சுகாதாரத் துறை, தொழில் துறை, கல்வித் துறை, நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை என அனைத்து முக்கியத் துறைகளின் செயல்பாடுகளும் ஸ்தம்பித்து நிற்கின்றன என்றும், இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.