வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க மாட்டோம் என்று மேடைகளில் வீராப்ப பேசும் முதலமைச்சர் விஜய், பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்கும் புதிய அரசியல் கலாச்சாரத்தை அரங்கேற்றி வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு தனது தனிப் பெரும்பான்மையை நிலைநிறுத்திக் கொள்ள பிற கட்சிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களைத் தூண்டி, ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் அவர்களைத் தவெக சார்பில் களமிறக்குவது தமிழக வாக்காளர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் ஜனநாயக விரோதச் செயலாகும் என அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த நான்கு மாதகால தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போய் உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு பின்னடைவால் தொடர் கொலைகளும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகவும் அவர் சாடினார். மேலும், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், இதனால் தவெக அரசு எந்த திசையிலும் நிலையான ஆட்சித் திறனின்றி தட்டுத்தடுமாறி வருகிறது என்றும் உதயகுமார் சாடினார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள் இந்தச் ஜனநாயக விரோதக் கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும், ஆளுங்கட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு இடம் கொடுத்தால் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாத ஆபத்தான சர்வாதிகாரச் சூழல் உருவாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார். பேரறிஞர் அண்ணா கூறியது போல, ஆளுங்கட்சியைச் செம்மைப்படுத்தவும் எச்சரிக்கை மணி அடிக்கவும் ஒரு வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்றும், கடிவாளமில்லாத அரசு அமைந்தால் மாநிலத்தின் எதிர்காலமும் வளர்ச்சியும் முற்றிலுமாக கேள்விக்குறியாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த ஜனநாயக அத்துமீறல்களுக்குத் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் அளித்த அமோக ஆதரவை நினைவுகூர்ந்த அவர், எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்தவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சாதனை திட்டங்களைத் தொடரவும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதி வாக்காளர்கள் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தலைநகர் டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள பிரபல 'பர்கர் சிங்' உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிர்ச்சியளிக்கும் அனுபவம் ஏற்பட்டுள்ளது.…
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சூர்யலங்கா கடற்கரையில் தற்போது எதிர்பாராத விதமாகப் பெரும் பதற்றமும் குழப்பமான சூழலும்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள பகதூர்கட் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த லட்சுமண் சிங்,…
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா பகுதியில் குடும்பச் சொத்து தொடர்பான நிலத் தகராறு, உடன் பிறந்த சகோதரர்களுக்கு இடையே பெரும்…
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய இளம் பெண்கள் இருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த…
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா பகுதியில் விவசாயத் தேவைக்காக வழக்கமாக வழங்கப்படும் பத்து மணி நேர மின்சாரம், கடந்த பதினைந்து நாட்களாக…