தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரவி. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார். இதனைத் தவிர இவர் கைவசம் கராத்தே பாபு என்ற திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கம் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே நடிகர் ரவி மோகனுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுமார் 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பெரிய உள்ளதாக அறிவித்தனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்துள்ளனர். தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ரவி மோகன் தற்போது சினிமாவில் பிசியாக உள்ளார். இப்படியான நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்திற்கு ரவி மோகன் கெனிஷா உடன் ஜோடியாக மேட்சிங் மேட்சிங் உடை அணிந்து வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், என் மௌனத்தை கலைக்கிறேன், என் பக்கம் உண்மையும் நியாயமும் இருந்து தான் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம். எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக நான் காதலுடனும் நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கைநழுவி சென்றுவிட்டார்.

பல மாதங்களாக அந்த குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறேன். இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதோர் உறவை உருவாக்கிக் கொண்டதால் பழைய உறவு இப்போது வெறும் செங்கல் சுவர் போல அவருக்கு காட்சி அளிக்கிறது. இன்று நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆர்த்தி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

இப்படி இருக்கும் நிலையில் ஆர்த்தியின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவி மோகன் தோழி கெனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர், வாழ்வில் வெல்ல வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளது. ஒன்று ஆதரவான துணை இருக்க வேண்டும் அல்லது துணையே இல்லாத வாழ்க்கை தான் கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய இந்த பதிவை இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

