96 இயக்குனரின் நீண்ட நாள் கனவை நினைவாகிய சூர்யா, கார்த்தி.. பிரேமுக்கு பிரம்மாண்ட தார் கார் பரிசளித்து சர்ப்ரைஸ்..!

By Nanthini on வைகாசி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் பிரேம்குமார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோரை வைத்து இயக்கியிருந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கத்தி மற்றும் ரத்தம் தெறிக்காத நல்ல கதைகளை முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். 96 மற்றும் மெய்யழகன் போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்து அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். சூர்யாவின் 2டி தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரன் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த மெய்யழகன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

இளையராஜாவின் இசைக்கான சமர்ப்பணம் – இயக்குநர் ச. பிரேம்குமார் - இது தமிழ்

   

வசூல் ரீதியாக இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் ஓடிடியில் வெளியான பிறகு பலரின் மனதை கொள்ளை கொண்டது. திரையரங்கில் இந்த படத்தை பார்க்க தவறியவர்கள் வருத்தப்பட்டனர். நடிகர் நானி ஹிட் 3 திரைப்படத்தின் விளம்பரத்திற்காக சென்னை வந்திருந்த போது தனக்கு பிடித்த தமிழ் படம் மெய்யழகன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க முடியும் ஆனால் மெய்யழகன் போன்ற மனதை வருடும் படங்களை உருவாக்குவது மிகவும் கடினம் என்று கூறியிருந்தார்.

   

மெய்யழகன் இயக்குநருக்கு கிடைத்த மெகா பரிசு!.. சூர்யாவின் தங்க மனசு!.. கார்த்தி பார்த்த தரமான வேலை!.. | suriya and karthi gifted mahindra thar car to meiyazhagan director ...

 

மெய்யழகன் திரைப்படத்தை தொடர்ந்து பிரேம் குமார் தற்போது 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இப்படியான நிலையில் தனது நீண்ட நாள் கனவான மஹிந்திரா தார் காரை வாங்குவதற்கு கடந்த ஒரு வருடமாக அவர் முயற்சி செய்து வந்த நிலையில் கையில் பணம் இருந்தும் வேறு சில கார்களை அவர் பரிசீலித்தார். அவர் எதிர்பார்த்த வசதிகள் அவற்றில் சரியாக அமையாததால் தார் காருக்கான தேடலை தொடர்ந்தார்.

மெய்யழகன் இயக்குநருக்கு பிடித்த வெள்ளைக் கார்.. பல மாதங்களாக தேடி வாங்கிக் கொடுத்த சூர்யா.. ஒரே சந்தோஷம்! | Actor Suriya Present Mahindra Thar Roxx AX 5L 4x4 ...

இதனை அறிந்த நடிகர் சூர்யா தற்போது அவருக்கு வெள்ளை நிற பிரம்மாண்ட தார் காரை பரிசாக அளித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தி மெய்யழகன் இயக்குனருக்கு கார் சாவியை வழங்கியதோடு அவருடன் காரில் ஒரு ரைட் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு சூர்யா சார் எனக்கு இன்னொரு அண்ணன் என்று நிகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரெட் ரோப் பாணியில் உருவான திரைப்படம் லாபம் ஈட்டிய நிலையில் மெய்யழகன் இயக்குனருக்கு சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து கார் பரிசளித்தது பலரையும் கவர்ந்துள்ளது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Premkumar Chandran பதிவைப் பகிர்ந்துள்ளார் (@prem_storytelling)