Categories: சினிமா

தனுஷ் கைவிட்ட கதையை டேக் ஆஃப் பண்ணும் ஜெயம் ரவி.. படத்தை இயக்கப்போவது இவர் தானா..?

Spread the love

ரவி மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி மற்றும் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை மோகன் தமிழ் சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்தார் மற்றும் இவரது அண்ணன் மோகன் ராஜா இயக்குனராகமும் இருக்கிறார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ரவி மோகனுக்கு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு “ஜெயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வம் வந்தார் ரவி மோகன்.

அதற்குப் பிறகு பல கமர்சியல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பேராண்மை, பூலோகம், தனி ஒருவன், டிக் டிக் டிக் என பலதரப்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் ரவி மோகன். அதிலும் குறிப்பாக மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் ரவி மோகன். தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரவி மோகன் நடித்த காதலுக்கு நேரமில்லை திரைப்படம் பொங்கலை  முன்னிட்டு  வெளியாகி  ஓடி கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து ஜீனி திரைப்படம் மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது.  இப்படியான நிலையில் தற்போது ரவி மோகன் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இது வெற்றிமாறனின் கதை தான். சமீபத்தில் கூட வெற்றிமாறன் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருந்தார். தனுஷை வைத்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு தனுசுக்காக வெற்றிமாறன் சூதாடி என்ற டைட்டிலுடன் ஒரு கதையை எழுதி இருந்தார். கிட்டத்தட்ட 15 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நடந்துள்ளது. ஆனால் சில காரணங்களால் படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது. அந்த கதையை தான் தற்போது இந்த காலத்திற்கு ஏற்றது போல வெற்றிமாறன் சில சில மாற்றங்களை செய்துள்ளதாகவும் அதில் தான் தற்போது ரவி மோகன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கதையை தான் தற்போது கௌதம் மேனன் இயக்க உள்ளார். இந்த தகவலை வலைப்பேச்சு குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Nanthini

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

3 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

3 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

4 மணத்தியாலங்கள் ago