இது மனுஷங்க வார்டா? இல்ல எலி வார்டா..? மருத்துவமனையில் ஓடி விளையாடும் எலிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Soundarya on தை 14, 2026

Spread the love
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள தன்னாட்சி அரசு மருத்துவக் கல்லூரியின் எலும்பு சிகிச்சை வார்டில் ஏராளமான எலிகள் நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை பிரிவில் நோயாளி ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு அருகிலேயே எலிகள் கூட்டமாகச் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆக்ஸிஜன் குழாய்கள் மற்றும் மருந்துப் பொட்டலங்கள் மீது எலிகள் ஏறி விளையாடுவது போன்ற காட்சிகள் நோயாளிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.

இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் கட்சி, “இது மனிதர்களுக்கான வார்டா அல்லது எலிகளுக்கானதா?” என ஆளும் அரசை விமர்சித்துள்ளது. நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடப்பதாலேயே எலிகள் வருகின்றன என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.