“திமுக அரசின் மீது விழுந்த கரும்புள்ளி” ஆசிரியர் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்…!!

By Soundarya on தை 14, 2026

Spread the love
சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன், விஷம் அருந்திய நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜனவரி 14, 2026) மாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஆசிரியர்கள் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது கோரிக்கைகள் நிறைவேறாத விரக்தியில் அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. 
ஆசிரியர் கண்ணனின் மறைவிற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கண்ணனின் இறப்பு நெஞ்சைப் பிழியும் வகையில் அமைந்துள்ளதாகவும், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகப் போலி வாக்குறுதி அளித்த ஆளும் திமுக அரசின் மீது விழுந்த கரும்புள்ளி இது என்றும் விமர்சித்துள்ளார். மேலும், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.