“அடியாத்தி… என்ன இது…?” ஒரே ஆட்டம் தான்…! வாடிக்கையாளர்கள் சாப்பிடும் இடத்தில் அசால்ட்டாக சுற்றிய எலிகள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

குஜராத் மாநிலம் ராஜ்கோட் கிரீன்லேண்ட் சௌக் பகுதியில் அமைந்துள்ள பிரபல மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில், வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் மேஜை மற்றும் நாற்காலிகள் மீது இரண்டு பெரிய எலிகள் சர்வ சாதாரணமாக ஓடித் திரியும் கொடூரக் காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ராஜ்கோட் மாநகராட்சி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சோதனையில், உணவகத்தின் பார்ட்டி பகுதியில் எலிகள் சுற்றித் திரிந்தது உறுதி செய்யப்பட்டது.

   

இதையடுத்து, சுகாதாரக் குறைபாடு மற்றும் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அந்த மெக்டொனால்ட்ஸ் கிளைக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அங்குப் பயன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஸ்ட்ராபெரி பழக்கூழ் மாதிரிகளைக் கைப்பற்றிய அதிகாரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்கோட் முழுவதும் நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் 53 உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 65 கிலோ அழுகிய உணவுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.