“பாவம் அதுவும் உயிர் தானே…” ரூ.2 லட்சம் புல்லட் பைக்கை சேதப்படுத்திய எலிகள்…. 6 மாதங்கள் கழித்து பார்த்த உரிமையாளருக்கு ஷாக்…. வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 24, 2026

Spread the love

சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கை நிறுத்திவிட்டுச் சென்ற உரிமையாளர் ஒருவர், 6 மாதங்கள் கழித்து வந்து பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது பைக் இயங்கவில்லை. சந்தேகமடைந்து பைக் என்ஜினைப் பிரித்துப் பார்த்தபோது, எலிகள் பைக் என்ஜினுக்குள் கூடு கட்டி, பல எலிக்குஞ்சுகளுடன் குடித்தனம் நடத்தி வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அந்த எலிகள் பைக்கின் முக்கிய வயரிங் அமைப்புகளைக் கடித்துக் குதறியிருந்ததால், அதைச் சரிசெய்ய சுமார் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை செலவானது.

இருப்பினும், பைக்குக்கு பெருமளவு சேதம் ஏற்படுத்திய போதிலும், அந்த இளைஞர் எலிகளையோ அல்லது அதன் குஞ்சுகளையோ கொல்லாமல், அவைகளைப் பத்திரமாக மீட்டுப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்று விட்டுள்ளார். வாய் பேச முடியாத ஜீவன்கள் மீது அந்த இளைஞர் காட்டிய இந்தச் சிறந்த மனிதநேயத்தைச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.