குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கி உழைத்த நபர் ஒருவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது வீட்டிற்குத் திரும்பிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையவாசிகளின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்த கணவர் கதவைத் தட்டியபோது, எதிர்பாராதவிதமாகத் தனது கணவரைக் கண்ட மனைவி ஆனந்தக் கண்ணீருடன் அவரைக் கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.
பின்னர், அவரது பாதங்களைத் தொட்டு வணங்கித் தனது நீண்ட நாள் காத்திருப்பையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தினார்.குடும்பத்தின் வறுமையைப் போக்கத் தங்களது ஆசைகளையும் சொந்த பந்தங்களின் அன்பையும் தியாகம் செய்து வெளிநாடுகளில் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையையும், அவர்களின் மறுசந்திப்பு தருணத்தின் அழகையும் உணர்த்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.
