மக்களே..! இன்று முதல் வாங்கிக்கொள்ளலாம்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…!!

By Soundarya on தை 23, 2026

Spread the love

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், ஜனவரி மாதத்திற்கான வழக்கமான ரேஷன் பொருட்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் தங்களுக்குரிய அரிசி, சர்க்கரை மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பொங்கல் பரிசு விநியோகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கும் என கூட்டுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் வழக்கம்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று தங்களின் குடும்ப அட்டையைப் பயன்படுத்தித் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.