இந்த நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது… குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!

By Soundarya on கார்த்திகை 22, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

அதில், பொங்கல், தைப்பூசம், ரம்ஜான், பக்ரீத், மே தினம், மிலாது நபி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 14 ஆம் தேதிக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.