தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இதனிடையே தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாக இருந்த அதிமுக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து அதன் தனி பெரும்பான்மையே இழந்து வருகின்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு யார் முதல்வர் பதவியில் அமர்வது என்பதில் தொடங்கிய சண்டை தற்போது வரை ஓயவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முந்தியடித்த கட்சிகள் எல்லாம் தற்போது அதிமுக என்றாலே யோசிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து பலர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்து வருவது வாடிக்கையாக்கிவிட்டது. இதற்கெல்லாம் இபிஎஸ் இன் தலைமை தான் காரணம் என்றும் பலரும் கூறி வருகிறார்கள். அப்படிதான் தற்போது அதிமுகவின் நடவடிக்கையும் உள்ளது. இப்படியான சூழலில் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அரசியலில் நுழைந்ததிலிருந்து முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் விஜய் கட்சியில் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இருந்து பிரிந்து நால்வர் அணியாக உருவானவர்கள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணையப் போகிறார்கள் என்ற தகவலும் பரவி வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசானா தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இவருடைய இந்த இணைவு அதிமுகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் அதிமுகவிலிருந்து பலரும் விலகி வருவதால் இபிஎஸ் இன் தலைமையின் மேல் அதிமுக தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது என்றும் கூறி வருகிறார்கள். இதனால் இன்னும் பல அதிமுகவை விட்டு விலகி வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் இணைவதற்கு தயாராகி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
