“நீயும் மனுஷன் தானே, அமைச்சர்கள் அதை திண்ண முடியுமா?”… மேடையிலேயே சீமான் விடுத்த ஓப்பன் சேலஞ்ச்… அதிர்ந்து போன கோட்டை….!

By Nanthini on தை 24, 2026

Spread the love

தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியின் தரம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், “அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை அமைச்சர்கள் யாராவது ஒருவேளையாவது சாப்பிடுவார்களா?” என்று ஆவேசமாகக் கேட்டார். 60 ஆண்டுகளாகியும் தலைநகர் சென்னையில் மழைநீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

விமான நிலைய விரிவாக்கம் குறித்துப் பேசிய சீமான், மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போதைய தேவை என்றாலும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது என்பது ‘பேராசை’ என்று குறிப்பிட்டார். மேலும், தனது அரசியல் என்பது பூமிக்காகவும் இயற்கையை நிலைநிறுத்தவும் முன்னெடுக்கப்படும் ஒரு தனித்துவமான அரசியல் என்றும், இந்தியாவில் தனக்குப் போட்டியாக எந்தவொரு கட்சியும் இல்லை என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

   

மக்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்துப் பேசுகையில், வறுமையும் அறியாமையும் சேரும்போது மக்களின் மறதி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முதலீடாக மாறிவிடுகிறது என்று வருத்தம் தெரிவித்தார். வெற்றி தோல்விகளைக் கண்டு அஞ்சாத பரம்பரை தங்களுடையது என்று குறிப்பிட்ட அவர், கொள்கை மாறி கட்சி மாறுபவர்களை மக்கள் கேள்வி கேட்காதது வேதனை அளிப்பதாகக் கூறினார். இவரது இந்த அடுக்கடுக்கான கேள்விகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.