முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்களில் ரேஷன் பொருள் வீடு தேடி வரும்..? முழு விவரம் இதோ..!!

By Meena on ஆவணி 14, 2025

Spread the love

தமிழக முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள வயது முதிந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு வீடு தேடி வரும் அரிசி ,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சேர்க்குமாறு அமைக்கப்பட்டுள்ளது . இத்திட்டத்தை  சென்னை தண்டையார்பேட்டை ,கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று பொருட்களை கொடுத்து முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இது மக்களின் நலச் சார்ந்த இத்திட்டம் என  சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. இது வாழ்க்கை பிரிவின் மேம்படுத்து வதன் மூலம் உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இத்திட்டத்தின் வாயிலாக 34 ஆயிரத்து 809 நியாய விலை கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15, 81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20, 42,657 பயனாளர்களுக்கும், 91 ஆயிரத்து 969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளுக்கும், மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கும், ஆகியோர் வீட்டிற்கே குடிமைப் பொருட்களை சேர்ப்பதாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

   

இத்திட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்தும் மற்றும் கள அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது திட்டத்தின் மூலம் மின்னணு எடை தராசு e-PoS இயந்திரம் மற்றும் உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் பொருட்களை பாதுகாத்து தகுதி உள்ளவர்களுக்கு வீட்டிற்குச் சென்று நியாய விலை கடை விற்பனையாளர் கொடுப்பார்.