இனி எந்த பொருளும் இல்ல, இவர்களின் ரேஷன் கார்டு ரத்து… தமிழகம் முழுவதும் அரசு போட்ட அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஆடி 28, 2025

Spread the love

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அரசு வழங்கும் பல நிதி உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது அவசியமாகும். அதேசமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் ரேஷன் கார்டு பயனாளிகள் கேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இப்படியான நிலையில் ரேஷன் கார்டு பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரேஷன் கார்டை பயன்படுத்தவில்லை என்றால் அவர்களது ரேஷன் கார்டை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரேஷன் கடை வைத்துக்கொண்டு எந்த பொருள்களையும் வாங்க முடியாது. ஒருவேளை கார்டு ரத்து செய்யப்பட்டால் மீண்டும் கார்டை பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு மூன்று மாதங்களுக்குள் கேஒய்சி அப்டேட் செய்தால் மட்டுமே ரேஷன் கார்டு ஆக்டிவேட் ஆகும் எனவும் இல்லை என்றால் புதிய கார்டு தான் விண்ணப்பித்து பெற வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.