ரேஷன் கார்டு ரத்து… ஜனவரி 1 முதல் இவர்களுக்கு பொருட்கள் கிடையாது… அரசு முக்கிய அறிவிப்பு…!

Spread the love

ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் மற்ற திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். ஆனால் ரேஷன் கார்டில் நிறைய மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். குடும்ப வருமானம் என்பது அவசியமாகும்.

நிறைய பேர் குடும்ப வருமானத்தை குறைவாக கூறி ரேஷன் கார்டுகளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிவிட்டு ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல நிறைய பேர் போலியான ஆவணங்களை வைத்து இரண்டு மூன்று ரேஷன் கார்டுகளை வாங்கி வைத்துள்ளன. கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காமல் ரேஷன் கார்டுகளை பலரும் பயன்படுத்துகின்றன. அப்படிப்பட்ட நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த ரேஷன் கார்டுகளை அரசு தற்போது ரத்து செய்து வருகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பயனாளிகள் அனைவரும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கேஒய்சி அப்டேட்டை முடித்திருக்க வேண்டும்.

அதை செய்யாதவர்கள் மீதும் இரண்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்களுடைய இ கேஒய்சி சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. இதனை சரியான காலக்கெடுவுக்குள் முடிக்காவிட்டால் ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிறுத்தப்படலாம். நீங்கள் ஆன்லைன் மூலமாக அல்லது ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கேஒய்சி சரிபார்ப்பை முடித்து விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

14 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

17 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

27 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

35 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

36 minutes ago