ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் இச்சாபுரம் நகர், கர்ஜி தெருவை சேர்ந்த இளம்பெண் முத்தி ரெட்டி வாணி (19) என்பவருக்கும் கர்நாடகாவை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள துர்கா தேவி கோவிலில் திருமணம் நடந்துள்ளது. பிறகு மணமகன் வாணியை தன்னுடைய சொந்த ஊருக்கு ரயிலில் அழைத்துச் சென்றார். விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்ததும் கழிவறைக்கு செல்வதாக கூறி ரயிலிலிருந்து இறங்கிய வாணி மீண்டும் அந்த ரயிலில் ஏறவில்லை. இதனை தொடர்ந்து மனைவியை காணாததால் பதறிய வாலிபர் ரயிலுக்குள் வாணியை தேடி அலைந்து உள்ளனர். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தி அடைந்தார். இதனிடையே மணமகன் வீட்டார் வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருந்தனர்.
அந்தப் பணத்தையும் நகையையும் எடுத்துக்கொண்டு வாணி தப்பி சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் கோபம் அடைந்த நிலையில் மணமகன் குடும்பத்தினருக்கு இச்சா புறத்தில் உள்ள தனது அத்தை சந்தியா என்பவர் வீட்டில் வாணி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வாணியை தேடிச்சென்று அவர்கள் சந்தியாவிடம் தங்களுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மணமகன் குடும்பத்தினர் போலீசில் வழக்கு தொடர்ந்தன. அந்த விசாரணையில் பல திடுக்கிட்டு உண்மைகள் வெளிவந்தது. அதாவது சிறுவயதிலேயே தாயே இழந்த வாணி தந்தையை பிரிந்து உறவினர்களிடம் வளர்ந்துள்ளார். இதனால் அத்தை சந்தியா வாணியை சிறுவயதிலேயே தன்னுடைய வலையில் விழ வைத்துள்ளார்.
திருமணமாகாத அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு இருவரும் தப்பி விடுவார்கள். இதுவரை கர்நாடகா மற்றும் ஒடிசா என பல மாநிலங்களில் திருமணம் ஆகாத எட்டு இளைஞர்களை இவர்கள் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது ஒன்பதாவது திருமணத்தில் தான் வசமாக சிக்கி உள்ளனர். வானியால் ஏமாற்றப்பட்ட மேலும் இரண்டு இளைஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தற்போது அவரை போலீசார் தேடி வரும் நிலையில் 19 வயது இளம் பெண் ஒன்பது பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…