தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருட்கள் இந்த மாதமே வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி முடிந்த பிறகு நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அக்டோபர் 21 இன்று முதல் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் விரைந்து சென்று அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை இப்போதே பெற்றுக் கொள்ளுங்கள்.
