ஆட்டோக்காரர் சொன்ன அந்த வார்த்தையால் தன்னுடைய ஹிட் ஃபார்முலாவையே மாற்றிய இயக்குனர் ஹரி! என்னவா இருக்கும்?

By Arun

Published on:

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர்களில் ஒருவர். இவரது திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுவென மெட்ரோ ரயில் போல் மிக வேகமாக நகர்ந்துகொண்டே இருக்கும். “தாமிரபரணி”, “வேல்”, “வேங்கை”, “பூஜை”, “சிங்கம்” என அவரது பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஹரி படங்கள் என்றாலே வசனங்கள் தீ பறக்கும், கேமராக்களும் சேர்ந்து பறக்கும் என்பது போன்ற ஒரு தனித்த அடையாளம் ரசிகர்களிடையே இருந்து வந்தது. எனினும் சமீப காலமாக ஹரி இயக்கிய “சாமி ஸ்குயர்”, “யானை” போன்ற திரைப்படங்கள் சரியாக போகவில்லை.

   

இந்த நிலையில் ஹரி விஷாலை வைத்து “ரத்னம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு போன்ற பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹரி இதற்கு முன் விஷாலை வைத்து “தாமிரபரணி”, “பூஜை” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து “ரத்னம்” திரைப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்துள்ளார் ஹரி.

இந்த நிலையில் “ரத்னம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் ஹரி, “நான் ஒரே ஒரு தப்பு மட்டும் பண்ணல. என்னுடைய படங்களில் எடிட்டிங் மிக வேகமாக கட் செய்யும் ஒரு வழக்கம் இருந்தது. 10 வருடங்களுக்கு முன்பு அதனை ரசிகர்கள் ரசித்தார்கள். ஆனால் சமீபத்தில் பல ஜனங்களை நேரில் சென்று பார்த்து வருகிறேன். ஆட்டோக்காரர்கள், டீக்கடைக்காரர்கள் என பலரையும் சந்தித்து எனது திரைப்படங்களை குறித்து பேசினேன். அப்போது அவர்கள் ‘நீங்க ஃபாஸ்ட்டா கட் பண்றது இப்போ எங்களுக்கு இன்ட்ரஸ்ட்டா இல்லை’ என கூறினார்கள்.

அப்படி என்றால் ரத்னம் படத்தை எப்படி வேகமாக கொண்டு செல்வது என்று யோசித்தபோது அதன் திரைக்கதை வேகமாக நகர்வது போல் அமைத்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். ஆதலால் “ரத்னம்” திரைப்படம் ஒரு புது பாணியிலான ஹரி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar