அச்சோ… மாமியார், மாமனாரை மகிழ்ச்சிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா… திருமணத்துக்கு பின் இப்படியொரு மாற்றமா…?! வாழ்த்தும் நெட்டிசென்கள்…!!

Spread the love

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சில மாதங்களுக்கு முன்பு உதய்பூரில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய இந்த ஜோடி, சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் தந்தையின் சொந்த ஊரான தெலங்கானாவில் உள்ள தும்மன்பேட் கிராமத்திற்குச் சென்றனர். அங்கு தங்களின் ஒரு சிறிய கனவுத் திட்டத்தைத் தொடங்குவதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

முன்னர் அளித்திருந்த வாக்கின்படி, ‘விஜய் தேவரகொண்டா ஃபவுண்டேஷன்’ சார்பாக நாகர்குர்னூல் மாவட்டத்தில் உள்ள 44 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும், கடினமாக உழைக்கக்கூடிய 180 மாணவ-மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய், ராஷ்மிகா ஆகியோருடன் விஜய்யின் பெற்றோர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகையை மகிழ்ச்சியுடன் வழங்கினர்.

நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய ராஷ்மிகா, தனது பெயரை ‘ராஷ்மிகா மந்தனா தேவரகொண்டா’ என்று மாமனார் குடும்பப் பெயரைச் சேர்த்து விளித்தார். மேலும், மேடையில் கணவர் விஜய்யின் முகம் களைத்திருந்த போது தனது கைக்குட்டையால் துடைத்துவிட்டு, மீசையை முறுக்கிவிட்டு அன்பைப் பொழிந்தார். ராஷ்மிகாவின் இந்த அக்கறையான செயல்களும், குடும்பப் பெயரைச் சேர்த்துக் கொண்டதும் அங்கிருந்த அவரது மாமியார், மாமனார் மற்றும் ரசிகர்களைப் பெரிதும் நெகிழச் செய்து கவனத்தைப் பெற்றுள்ளது.

Swetha

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

6 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

6 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

6 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago