“எங்களை ஏமாத்துறாங்க!”.. வெறும் 6 மாத்திரைகளுக்கு 94 ஆயிரம் கேட்ட அமெரிக்கா… இந்தியாவில் விலைய பார்த்து ஆடிப்போன அமெரிக்கப் பெண்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!

Spread the love

அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா என்ற பெண்ணுக்கு அவரது மருத்துவர் பரிந்துரைத்த வெறும் ஆறு மாத்திரைகளின் விலை, அந்நாட்டு மருத்துவக் காப்பீடு ஏற்க மறுத்ததால் 1,000 டாலர் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாத நிலையில், இந்தியாவிலிருந்து நேரடியாக மருந்துகளைப் பெற்றுத்தரும் கனடிய மருந்தகம் ஒன்றின் மூலம் மருந்துகளை ஆர்டர் செய்யுமாறு மருத்துவர் அவருக்கு மாற்று வழி காட்டியுள்ளார். அதன்படி விக்டோரியா ஆர்டர் செய்தபோது, அந்த மருந்தின் அசல் விலை வெறும் 10 டாலர் என்றும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான கப்பல் கட்டணம் 15 டாலர் சேர்த்து மொத்தமாக வெறும் 25 டாலர் மட்டுமே ஆகியுள்ளது. அமெரிக்காவில் ரூ.94,000-க்கு விற்கப்பட்ட மருந்து இந்தியாவில் வெறும் ரூ.2,366-ல் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த அவர், “அமெரிக்க சுகாதார அமைப்பு ஒரு கேலிக்கூத்து; இங்கு நாங்கள் வெளிப்படையாகச் சுரண்டப்படுகிறோம்” என வீடியோ வெளியிட்டு தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

https://www.instagram.com/reel/DZYgShBBKIP/?utm_source=ig_embed&ig_rid=03178376-86a8-4b0e-b991-20f5ee19fb9a

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அமெரிக்க மருத்துவக் கட்டமைப்பின் மீதான மக்களின் கோபத்தையும், இந்திய மருத்துவத் துறையின் மீதான பாராட்டுகளையும் அறுவடை செய்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அமெரிக்காவின் மருந்துச் சந்தை முறையைக் கடுமையாக விமர்சித்து வருவதுடன், இந்திய மருந்தகங்களில் இந்த மருந்து இன்னும் மலிவாக, வெறும் ரூ.100-க்குள் கூட கிடைக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிலர், “அமெரிக்காவில் 1,000 டாலர் கொடுத்து மருந்து வாங்குவதற்குப் பதிலாக, இந்தியாவிற்கு விமான டிக்கெட் எடுத்து வந்து, ஒரு வாரம் சுற்றுலா முடித்துவிட்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு திரும்பினாலும் கூட அதைவிடக் குறைந்த செலவே ஆகும்” என்று அமெரிக்காவின் மோசமான மருத்துவச் சுரண்டலை நகைச்சுவையுடன் சாடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

ஐயோ காப்பாத்துங்க… பேருந்து லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்… சின்னாபின்னமான அரசு பேருந்து… அலறும் மக்கள்… நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து…!

அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக நசுங்கி…

1 minute ago

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

33 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

52 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

10 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

10 மணத்தியாலங்கள் ago