இது எப்போ..? ரகசியமாக திருமணம் செய்துகொண்ட ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா..? லீக்கான போட்டோவால் ரசிகர்கள் ஷாக்…!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) மூலம் உருவாக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பயனர் குண்டி ஸ்ரீகலா நாகராஜுவால் பகிரப்பட்டவை.

இந்தப் புகைப்படங்களில் ராஷ்மிகா மற்றும் விஜய் திருமண உடையில் மாலைகளுடன், நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரது மனைவி நம்ரதா ஷிரோத்கருடன் போஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், பின்னணியில் மலர் அலங்காரங்களுடன் “விஜய் & ராஷ்மிகா” என்று எழுதப்பட்டிருந்தது.