“டேய் பைத்தியமா நீ”… இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. போலீசுக்கே டிமிக்கியா..?

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

புனே நகரில் உள்ள கோத்வா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 22 வயது பெண் வசித்து வருகின்றார். இவர் அங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் நிலையில் இளம்பெண்ணுடன் அவரது சகோதரரும் வசித்து வந்துள்ளார். சகோதரர் வெளியூர் சென்றதால் இளம் பெண் வீட்டில் தனியாக இருந்ததை மோப்பம் பிடித்த ஆசாமி ஒருவர் திட்டமிட்டு ஐடி நிறுவன பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் கூரியர் டெலிவரி செய்பவர் போல இளம்பெண்ணின் குடியிருப்புக்கு வந்து கதவை தட்டி உள்ளார்.

அந்தப் பெண் கதவை திறந்ததும் வங்கி தொடர்பான ஆவணங்கள் கூரியர் மூலம் வந்திருப்பதாக தெரிவித்த ஆசாமி இதை நீங்கள் பெற்றுக் கொண்டதை உறுதி செய்ய கையெழுத்து போட வேண்டும் என்று கூறியுள்ளார். தன்னிடம் பேனா இல்லாததால் அதை எடுத்து வருமாறு அந்த பெண்ணிடம் அவர் கூறினார். அந்தப் பெண் பேனாவை எடுக்கச் சென்றபோது மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து உள்புறமாக கதவை பூட்டி திடீரென பெண்மீது பாய்ந்து பலவந்தப்படுத்தியுள்ளார்.

   
பிறகு என்ன நடந்தது என்பது அந்த பெண்ணுக்கு நினைவில்லை. மயக்கம் அடைந்த நிலையில் இரவு கண் விழித்து பார்த்த போது உடைகள் களைந்து அலங்கோலமான நிலையில் இருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றதை அவர் உணர்ந்து கொண்டார். தனது செல்போனில் இருந்த ஒரு படத்தைக் கண்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த ஆசாமி முகத்தின் ஒரு பகுதியும் பெண்ணின் முதுகுப் பகுதியும் தெரியும் வகையில் எடுத்துள்ள செல்ஃபி படம் அந்த போனில் இருந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடம் ஆவது தெரிவித்தால் உனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன்,மீண்டும் வருவேன் என்று அந்த ஆசாமி ஒரு மிரட்டல் பதிவையும் அந்த ஃபோனில் பதிவு செய்து வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே போலீசில் புகார் தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கூரியர் பையன் போல் வந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருந்த புகாரில் இளைஞர் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே பழக்கமானவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. புகார் கூறிய பெண்ணுக்கு மனநல பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த வழக்கில் ஆதாரமாக காட்டப்பட்ட செல்ஃபியை அந்தப் பெண்ணே எடிட் செய்து மிரட்டல் வாசகத்துடன் பரப்பியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.