போய் மூஞ்சக் கழுவிட்டு வா என்றா கமல்… ஹேராம் ஷூட்டிங்கில்தான் நான் ஒரு உண்மையை அறிந்தேன்.. பிரபல நடிகை சொன்ன வாவ் மொமண்ட்!

By vinoth on ஐப்பசி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

   

#image_title

   

அப்படி ஒரு படம்தான் கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்த ஹேராம் திரைப்படம். அந்த படம் சுதந்திர இந்தியாவில் நடந்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் அதற்குக் காரணம் காந்திதான் என்று முடிவு செய்து அவரைக் கொலை செய்ய கிளம்புவதுதான் கதை. ஆனால் முடிவில் அவன் காந்தியின் பக்தனாக ஆகி அவரது கொள்கை வழி வாழ்வதுதான் ஹேராம் படத்தின் கதை.

 

இந்த படத்தில் கமல்ஹாசனின் ஒரு ஜோடியாக வங்காள நடிகை ராணி முகர்ஜி நடித்திருந்தார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசனோடு நடந்த ஒரு சுவாரஸ்யமான தருணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஹேராம் படத்தில் முதல் காட்சியில் நடிக்க சென்றேன். அப்போது என் முகத்தில் இருந்த மேக்கப்பைப் பார்த்த கமல்ஹாசன், போய் முகத்தைக் கழுவிவிட்டு வா என்றார். நான் லேசாகத் துடைத்துவிட்டு வந்தேன். ஆனால் அவர் முழு மேக்கப்பையும் கலைக்க சொன்னார்.

நான் கழுவிவிட்டு வந்தேன். அப்போதுதான் நான் ஒன்றை உணர்ந்தேன். மேக்கப் எதுவும் இல்லாமல் கேமரா முன்னால் நடிக்க முடியும் என்பதை உணர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.