“உன் கூடவுமா அரசியல் பண்ணனும்”.. தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்த இயக்குனர் போஸ் வெங்கட்..!

By Nanthini on ஐப்பசி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். விஜய் ஆனந்த கண்ணீர் சிந்தும் அளவிற்கு தொண்டர்களின் அன்பு அந்த இடத்தில் நிறைந்திருந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜய்க்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு வந்த விஜய் மூத்த தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு கட்சி கொடியை ஏற்றினார்.

   

தொடர்ந்து கட்சியின் கோட்பாடுகள் வாசிக்கப்பட்டன. அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தனது தொண்டர்களுடன் உரையாற்ற தொடங்கிய விஜய் ஒரு குழந்தை மற்றும் பாம்பு கதையை சொல்லி தனது உரையை தொடங்கினார். அப்படி தனது முதல் மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்கள் பற்றி பேசினார். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தவெக- வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார் மற்றும் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் ஒரு குடும்ப சுயநல கூட்டம் நமது அரசியல் எதிரி என்று விஜய் பேசி இருந்தார்.

   

 

உலக வரலாறு மற்றும் மேற்கோள்கள் என mp3 ஆடியோ போல கொந்தளிப்பதாக பேசுவது எனது அரசியல் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கினார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சை போஸ் வெங்கட் கடுமையாக விமர்சித்து நள்ளிரவில் எக்ஸ் பக்கத்தில் ட்வீட் போட்டிருந்தார். அதில், “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும் .. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்” என்று  போஸ் வெங்கட் ட்வீட் போட்டிருந்தார்.