பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவதாக ரகசியத் திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் இதுதொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு ஜாய் கிரிஸில்டாவின் மகனை அவர் ஏற்றுக்கொண்டார். இக்கட்டான இந்த சூழலிலும் அவரது முதல் மனைவி ஸ்ருதி அவருக்கு உறுதுணையாக இருந்து நிலைமையைச் சமாளித்தார்.
சமீபத்தில் ஜாய் கிரிஸில்டாவுடன் பிறந்த தனது மகனின் முதல் பிறந்தநாள் விழாவை ரங்கராஜ் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அதேநேரத்தில், தயாரிப்பாளர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்கு முதல் மனைவி ஸ்ருதியுடன் அவர் ஜோடியாகச் சென்றிருந்தார். இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு மனைவிகளுடனும் அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இரு குடும்பங்களின் தேவைகளையும் நிகழ்வுகளையும் சமன் செய்வதற்காக அவர் மாறி மாறி ஓடிக்கொண்டிருப்பதை கவனித்த இணையவாசிகள், சமூக வலைத்தளங்களில் இதனை நகைச்சுவையாகப் பேசி வருகின்றனர். “சமையல் மற்றும் நடிப்பை விட, இரண்டு மனைவிகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பதுதான் அவருக்கு இனி உண்மையான சவாலான வேலையாக இருக்கப் போகிறது” என்று ரசிகர்கள் கிண்டலாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
