தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் இயக்குனர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் தற்போது அஜித்தை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் good bad ugly. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. முதன்முதலாக திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் தான் இயக்குனராக ஆதித் ரவிச்சந்திரன் அறிமுகமாகினார்.
அதன் பிறகு சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் திரைப்படத்தை இயக்கிய இவர் பிறகு பிரபுதேவாவை வைத்து பகீரா படத்தை இயக்கி இருந்தார். அடுத்து எஸ் ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தார். தற்போது அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த ஐந்து படங்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஆதிக்க ரவிச்சந்திரன் டபுள் மீனிங் காமெடி கதையை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் மற்றும் சிம்ரன் உள்ளிட்டோ நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினியாக நடித்த ஆனந்தி, ரம்யா என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.
அடுத்ததாக சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்தப் படத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. இப்படத்திலும் ஆதித் ரவிச்சந்திரன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் தமன்னா ரம்யா என்ற ரோலில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் மூன்றாவதாக இயக்கிய திரைப்படம் தான் பகீரா. பிரபுதேவா மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அமைரா தஸ்தூர் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இறுதியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. விஷால் இரட்டை வேடத்தில் நடித்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஹீரோயின் ரிது வர்மா ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திலும் ஹீரோயின் திரிஷா ரம்யா என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.
இப்படி ஒரு படத்தில் அல்ல தானியக்கியை 5 படங்களிலும் ஹீரோயினிக்கு ரம்யா என்ற பெயரையே இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன் தேர்வு செய்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்று தற்போது ரசிகர்கள் தேடத் தொடங்கியுள்ளனர்.