இவருக்காக இப்படி ஒரு நிலை?.. மருத்துவமனையில் எலும்பும் தோலுமாக தனுஷ் பட நடிகர்.. உதவி வேண்டி உருக்கம்..!

By Nanthini on பங்குனி 6, 2025

Spread the love

தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர்தான் அபிநய். அதன் பிறகு ஜங்ஷன் உட்பட சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். தன்னை தொடர்ந்து அமெரிக்க மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்ததால் அவர் வருத்தப்பட்டார். அந்த காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த இவர் போதிய வருமானம் இல்லாததால் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில வருடத்திற்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்படியான நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actress Sherin talks to Actor Abhinay after 20 years of Thulluvatho Ilamai  and consoles him | துள்ளுவதோ இளமை மறக்கலல்ல? 'நீங்க தனியா இல்ல' : 20  ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த ஷெரின் ...

   

சிகிச்சை பெற்று வரும் அவருடைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வயிறு வீங்கி ஆள் எழும்பும் தோலுமாக அடையாளம் தெரியாத அளவிற்கு இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் துள்ளுவதோ இளமை பட ஹாண்ட்சம் பாய் அபிநய்யா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவருடைய நிலைமை உள்ளது. அவருடைய சிகிச்சைக்கு தாங்கள் உதவி செய்ய முன் வருவதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

   

லிவர் சிரோசிஸ் தீவிர சிகிச்சையில் நடிகர் அபிநய்!! தற்போதைய நிலை இதுதான்..

 

பட வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் வேறு வேலை செய்திருக்கலாமே. சினிமா மட்டும் வாழ்க்கை கிடையாது. அப்படி இருக்கும்போது இப்படி ஆகிட்டீங்களே என ரசிகர்கள் அனைவரும் வருத்தத்துடன் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அம்மா இறந்த பிறகு இவருடைய நிலைமை மேலும் மோசமாகி விட்டதாம். வீட்டில் இருந்த அனைத்தையும் விற்று விட்டதாக தெரிவித்திருந்தார்.