‘அடுத்த சாவு நீதான்’ – பயத்தில் தந்தை தற்கொலை; மகள் மரண வழக்கில் ஜாமீனில் வந்தவர்கள் அட்டகாசம் – நடந்தது என்ன?

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரஜினி (44) கோமதி தம்பதியினர். இவர்களது 15 வயது மகள் தர்ஷினி, அண்மையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை காவல் துறையினர், சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதே பகுதியைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், தர்ஷினியின் மரண வழக்கிற்காகச் சிறைக்குச் சென்றவர்கள் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வெளியே வந்தவர்கள் தங்களது தவறை உணராமல், ரஜினியின் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், “அடுத்த சாவு நீதான்” என்று ரஜினிக்குக் கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் பகுதியில் கடுமையான அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினர் கடுமையான அச்சத்திலும், மன உளைச்சலிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.

மகளை இழந்து ஏற்கனவே தவித்து வந்த ரஜினி, ஜாமீனில் வந்தவர்களின் தொடர் மிரட்டலால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக, விபரீத முடிவு ஒன்றை எடுத்தார். எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி அவரும் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் வெளியே வந்து மிரட்டியதால், தற்போது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“பிலிங்கிட் ஆர்டர் செய்த முட்டையில் நெளிந்த புழுக்கள்…” மங்களூரு வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…

4 minutes ago

ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…

8 minutes ago

அடச்சீ… காதலனுடன் சுற்ற சொந்த மாமா வீட்டிலேயே… 5 லட்சம் நகை கொள்ளை… உல்லாச விடுதியில் ஜாலியாக… இருந்த காதலி அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…

10 minutes ago

அடப்பாவி… காதலிக்கு பிறந்தநாள் கிஃப்ட் ஐபோனா?… இல்ல ஜெயிலா?… 12 கிலோ கஞ்சாவுடன் பைக்கில் பறந்த… இளம் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…

20 minutes ago

“ஒரு பைசா கூட விடல…” சேற்றில் புதைந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம்…! உரியவரிடம் ஒப்படைத்த மீட்பு குழு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…

24 minutes ago