Categories: சினிமா

ஓடாத படத்துக்கு ஏன் எல்லாம் இவ்ளோ கஷ்டப்பட்றீங்க- நம்பிக்கையே இல்லாமல் நடித்த கார்த்தி… கடைசியில் நடந்ததுதான் ட்விஸ்ட்!

Spread the love

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் கார்த்திக். அவருக்கு திருப்புமுனையாக வருஷம் 16, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் , உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார்.

அழகான தோற்றம் கொண்ட கார்த்திக் 80 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் கார்த்திக் நிஜ வாழக்கையிலும் ஒரு ப்ளே பாயாகவே வலம் வந்துள்ளார். பல நடிகைகளோடு அவருக்கு தற்காலிக காதல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அது சம்மந்தமாக கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பிக் கிளப்பின.

மேலும் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் மற்றும் தேவையில்லாமல் அரசியலில் இறங்கியது எல்லாம் அவரின் சினிமா வாழ்க்கையை பாதித்தன. அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் கதாநாயகனாக படங்களில் நடிக்க முடியவில்லை. அவர் கடைசி காலங்களில் அவர் கொடுத்த சூப்பர் ஹிட் படம் என்றால் அது “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” திரைப்படம்தான். அந்த படத்தை விக்ரமன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ரமேஷ் கண்ணா அந்த படத்தில் நடிக்கும் போது கார்த்திக்கு அதில் விருப்பமே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் “அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, இந்த படம் ஓடவே ஓடாது. ஏன் எல்லோரும் இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டார். ஏனென்றால் அப்போதுதான் அவர் நந்தவனத்தேரு என்ற இதே போன்ற கதை கொண்ட ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ஓடவில்லை. அதனால் இந்த படமும் ஓடாது என அவர் நம்பினார்.

ஆனால் அதை விக்ரமன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவருக்குக் கதை மேல் நம்பிக்கை இருந்தது. அதே போல கார்த்திக் நம்பிக்கை இல்லாமல் நடித்தாலும் சிறப்பாகவே நடித்தார். க்ளைமேக்ஸ் காட்சியில் அவர் நடித்தது எல்லாம் படத்தின் ஹைலைட்டாக அமைந்தது. படம் வெளியாகி கார்த்தி நினைத்ததற்கு மாறாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

15 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago