#image_title
தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய கால சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். ஆனால் இன்றளவும் அவருக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். எம் ஜி ஆர் போல ஒழுக்கமான இளைஞனாக மக்கள் தோழனாக தன்னைக் காட்டிக்கொண்டார் ராமராஜன்.
1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.
அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படம் ஹிட்டாக அடுத்தடுத்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவரின் வீழ்ச்சி தொடங்கி 90 களின் ஆரம்பத்திலேயே அவர் தன்னுடைய் மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தார்.
ராமராஜனின் குறுகிய கால சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு இளையராஜாவும் முக்கியக் காரணம். அவரின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இளையராஜாதான் இசை. ஆனால் சில படங்களுக்கு மட்டும் தேவா இசையமைத்தார். தேவா பல ஆண்டுகளாக இசையமைப்பாளர் வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.
ராமராஜனை அறிமுகப்படுத்திய தயாரிப்பு நிறுவனத்திற்காக அவர் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் ‘மேளம் கொட்டு தாலி கட்டு’. இப்படத்தில் ராமராஜனோடு பாண்டியன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று ராமராஜன் பிடிவாதமாக இருந்தும் மலையாளத்தை சேர்ந்த பிரேம கேமதேசா என்பவரை இசையமைப்பாளராக பணியமர்த்தியது தயாரிப்பு நிறுவனம்.
ஆனால் அவர் இசையமைத்த பாடல்கள் எதுவும் சிறப்பாக வரவில்லையாம். அது மட்டுமில்லாமல் பின்னணி இசையமைக்கவும் அவர் வராமல் இழுத்தடித்தாராம். அப்போது பின்னணி இசைக் கலைஞராக வயலின் வாசித்துக் கொண்டிருந்த தேவாவை பின்னணி இசையமைக்க அமர்த்தியுள்ளனர். கிடைத்த அந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்ட தேவா சிறப்பாக இசையமைத்துக் கொடுத்துள்ளார். அதை கவனித்த ராமராஜன் அடுத்து தான் இயக்கிய மனசுக்கேத்த மகாராஜா படத்துக்கு தேவாவை இசையமைப்பாளராக ஆக்கியுள்ளார். அதுதான் தேவாவுக்கு இசையமைப்பாளராக ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாக அமைந்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…