Categories: சினிமா

தன்னுடைய படம் ஓடிய தியேட்டருக்கு நேரில் சென்று ராமராஜன் செய்த செயல்.. அதன் பலனாக கிடைத்த வெற்றி..!

Spread the love

தமிழ் திரையுலகில் மக்கள் கலைஞனாக ஜொலிப்பவர் தான் நடிகர் ராமராஜன். கிராமத்து நாயகன் என்று கூட இவரை சொல்லலாம். தான் நடிக்க கூடிய அனைத்து படங்களிலும் நம் நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் படத்தின் காட்சிகள் இடம்பெற வேண்டும் என்பதில் இவர் எப்போதுமே கவனமாக இருப்பார். அது மட்டுமல்லாமல் எம்ஜிஆரை போலவே ராமராஜனும் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இன்னும் சொல்லப்போனால் இரண்டு மனைவிகள் கொண்ட கணவன் என்ற கதாபாத்திரத்தில் கூட நடிப்பதை ராமராஜன் தவிர்த்து வந்தார். இப்படி தன்னால் ரசிகர்கள் எந்த விதத்திலும் கெட்டுப் போகக் கூடாது என்பதில் அக்கறை காட்டக் கூடியவர் தான் ராமராஜன்.

இவர் நீண்ட ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் அதன் பிறகு கடந்த வருடம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதன்படி பல வருடங்களுக்குப் பிறகு அவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் சாமானியன். இளையராஜாவின் இசையில் அமைந்த இந்த திரைப்படம் மக்களை திருப்திப்படுத்தும் என்று நினைத்தார்கள். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை படம் பதிவு செய்யவில்லை. ஆனால் ஒரு ஊரில் மட்டும் சாமானியன் திரைப்படம் 118 நாட்கள் கடந்து ஓடியதாம்.

அதாவது ஆலங்குளத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ராமராஜனின் நேரில் சென்று படத்திற்கான கட்டணத்தை 50 ரூபாய்க்கு விற்க சொன்னதாகவும் விற்கப்படும் மிக குறைவான விலையில் கொடுக்க சொல்லியும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு சோ வீதத்தில் சாமானியன் படத்தை ராமராஜன் ஓட்ட சொல்லியுள்ளார். அந்த தியேட்டர் ஓனர் ஏற்கனவே ராமராஜனின் தீவிர ரசிகராம். அதனால் ராமராஜனின் கோரிக்கையை ஏற்று அவர் அவ்வாறே செய்துள்ளார். அதனால் படம் 118 நாட்கள் ஓடியுள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த வெற்றியை அதே தியேட்டரில் படக்குழுவினர் இளையராஜாவுடன் இருந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Nanthini

Recent Posts

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…? பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த ஷாக் தகவல்…!

அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…

50 seconds ago

வகுப்பறையில் ‘குகும்பர் பார்ட்டி’… தட்டிக்கேட்ட பெற்றோரை அலறவிட்ட ஆசிரியை… வைரலகும் ஷாக்கிங் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…

5 minutes ago

BIG NEWS: திமுகவின் முக்கிய புள்ளி தவெகவில் இணைந்தார்…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!

அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…

9 minutes ago

“கத்தி ரெண்டு பக்கமும் கூர்மையானது…” ஜாமீனில் வெளியே வந்ததும் முதல்வர் விஜய்க்கு ஓப்பனாக அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த மிரட்டல்…!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…

12 minutes ago

மருமகனின் ரகசிய போன் கால்.. பாத்ரூம் கதவை உடைத்த கள்ளக்காதலன்… 10 வயது மகனின் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… மதுரையில் சினிமா பாணியில் நடந்த பழிவாங்கல்….!

மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…

15 minutes ago

6 நிமிடத்தில் 43 அடி… பியூட்டி பார்லரில் அலறிய உரிமையாளர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…

16 minutes ago