BREAKING: மாம்பழம் சின்னம் தொடர்பான ராமதாஸின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

By Soundarya on சித்திரை 10, 2026

Spread the love

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி அவர் தாக்கல் செய்த இந்த மனு, தற்போதைய நிலையில் ஏற்புடையது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இத்தகைய கோரிக்கையை ஏற்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த வழக்கு சட்டப்படி செல்லாது எனத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்தது. தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.