தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வர பாமகவில் மட்டும் மோதல் போக்க நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தை மற்றும் மகன் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ள நிலையில் கட்சி யார் பக்கம் உள்ளது என்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகிறார்கள். இப்படியான நிலையில் சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அன்புமணியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அது மட்டுமல்லாமல் மகன் அன்புமணியை ராமதாஸ் கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல் மனம் வருந்தியும் கண்ணீர் சிந்தியவாறு பேசி இருந்தார். மேலும் இந்த பொதுக்குழுவில் பேசிய காந்திமதி, ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்துள்ளார். இதனால் ராமதாஸ் தரப்பு அறிவாலயம் (திமுக) செல்லும் என கூறப்பட்ட நிலையில் அதிகாரத்தில் பங்கு என்று அழைப்பை வாசலிலேயே வைத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் பனையூர் நோக்கி செல்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தப் விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தாய்லாந்தின் புகெட்டில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, எதிர்பாராத…
தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.…
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம்…
ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…