BREAKING: “நானே பாமக தலைவர்” -ராமதாஸ் திட்டவட்டம்..!

By Soundarya on ஆனி 12, 2025

Spread the love

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லியும் அதை அன்புமணி நம்பவில்லை. ஐயாவை நம்ப முடியாது எழுதி கொடுக்க சொல்லுங்கள் என்றார். எனக்குள் இருந்த கோபம் பொங்கி எழுந்தது. எனவே நீயா நானா என பார்த்து விடுவோம் என்று முடிவு எடுத்து விட்டேன். குலசாமி என்று கூறிக் கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள்.  2026 தேர்தல் வரை நானே பாமக தலைவராக நீடிப்பேன் என்று கூறியுள்ளார்.