பாமகவில் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நிலையில் தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி தான் பாமக தலைவர் என்று கூறியது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர் டெல்லி தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாமகவின் மாம்பழ சின்னம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவன தலைவர் ராமதாஸ், கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லிக்காட்ட வேண்டி உள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். இதில் சம்பந்தமே இல்லாமல் பொய் மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளது. கட்சி எங்களுக்கே என்று சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. கட்சி எங்களுக்கு இல்லை என சொல்ல எனக்கு ஒரு பிள்ளை. தேவை என்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளட்டும். இனி என்னுடைய பெயரையோ படத்தையோ அன்புமணி எங்கேயும் பயன்படுத்தக்கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. என் வீட்டில் ஒட்டு கேட்ப கருவி வைத்தது தொடர்பாக புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று ராமதாஸ் ஆதங்கத்துடன் பேசி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
பொதுவாக மாமனார் - மருமகன் உறவு என்றாலே மனக்கசப்புகள் அதிகம் பேசப்படும் சூழலில், தனக்கு வாழ்வளித்த மாமனாருக்கு ரூ.1.5 கோடி…
தமிழ்நாட்டில் கல்வி விருது வழங்கும் விழாக்களும், அதில் பின்பற்றப்படும் நடைமுறைகளும் எப்போதும் சமூக அளவில் பெரும் விவாதப் பொருளாகவே இருந்து…
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து சான்றிதழ் வழங்குவதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல லட்சக் கணக்கில் பண வசூல்…
சென்னை என்றாலே மெரினா கடற்கரை, ஃபில்டர் காபி, தியாகராய நகர் ஷாப்பிங் போன்ற பல பெருமைகள் நினைவுக்கு வந்தாலும், அதே…
தமிழக முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று வந்தார். சுமார்…