நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் சங்கர் எடுத்துள்ளார். ராம்சரண் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தில்ராஜ் ப்ரொடக்ஷன் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படத்தை சங்கர் நேரடி தெலுங்கு திரைப்படமாக இயக்கியதன் மூலம் டோலிவுட் சினிமாவில் தன் முதல் காலடித்தடத்தை பதித்துள்ளார்.

இயக்குனர் சங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர், அவருடைய படங்களில் பல சாதனைகள் செய்யப்படும் என்பது தவிர்க்க முடியாது. அதை தனது தெலுங்கு சினிமாவிலேயே செய்ய ஆரம்பித்துள்ளார். கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்த சங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது இந்திய வரலாற்றில் தெலுங்கு சினிமா செய்யும் சாதனை என்றே கூறப்படுகின்றது. ஏனென்றால் இதற்கு முன்பு எந்த தெலுங்கு படமும் அமெரிக்காவில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தியது இல்லை. மேலும் இந்த திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமைக்கு தில்ராஜ் 40 கோடி ரூபாய் என்று முடிவு செய்துள்ளார். அதன் பிறகு 15 கோடி என ஆரம்பித்த நிலையில் அதெல்லாம் நமக்கு செட்டாகாது என்று தில்ராஜ் கூறி இது சங்கர் படம் என்று சொல்லி உள்ளார். இந்தியன் 2 திரைப்படத்திற்கு முன்பு வேண்டுமென்றால் நீங்க அப்படி சொல்லலாம் இப்போ அப்படி சொல்ல முடியாது என்று கூற உடனே தில்ராஜ் நீங்க 15 கோடி என்று சொல்லி என்ன அசிங்கப்படுத்தாதீங்க ஃப்ரீ ரிலீஸ் பண்ணுங்க அதுல வர லாபம் என்னவோ அதை நான் எடுத்துக்கிறேன் என்று கூறி சத்தியம் தியேட்டரின் முன்னாள் ஓனர் சொரோப் ரெட்டிக்கு தான் திரையரங்கு உரிமையை தில்ராஜ் கொடுத்துள்ளார்.
