#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மிகப் பிரபலமானவர் சீரியல் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து இவர், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த சக சீரியல் நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர் மன அமைதிக்காக வேண்டி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரக்ஷிதா தனது கணவர் தினேஷ் தனக்கு ஆபாசம் மெசேஜ் அனுப்பி தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
இதையடுத்து இதுகுறித்து போலீசார் தினேஷை அழைத்து விசாரணையும் மேற்கொண்டனர். ஆனால் போலீஸ் விசாரணையில், ‘தினேஷிடம் இருந்து எந்தவித ஆபாச மெசேஜும் வரவில்லை என்பதும், ரச்சிதாவை பொய்யான புகார் அளித்திருந்ததும் நிரூபனமானது. இதைத்தொடர்ந்து போலீசார் ரச்சிதாவை எச்சரித்து அனுப்பினர். இப்படி இருவருக்குள்ளும் தற்பொழுது வரை பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்பொழுது கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அங்கு அவர் அவ்வப்பொழுது ரக்ஷிதாவை பற்றியும் பேசி வருகிறார். இந்நிலையில் நடிகை ரக்ஷிதா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தற்பொழுது தனது கணவர் தினேஷ் தன்னை பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறிய விஷயங்கள் உண்மையல்ல என்பதை போல கலங்கிய கண்களுடனும், சோகத்துடனும் ‘ என்கிட்டயும் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. சொல்ல விரும்பல. அமைதியா இருக்கிறதே சிறந்த பதில் ‘என்பது போல விடியோவுடன் பதிவு வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…