விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது தொடங்கி 10 வாரங்களை கடந்துள்ளது. இந்த சீசனில் மக்களுக்கு தெரிந்த பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டன. அதிலும் அர்ச்சனா மற்றும் நிக்சன் ஆகியோர் இடையே சண்டை வெடித்தது.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல போட்டியாளர்கள் தங்களுடைய வேலைகளை பார்க்க தொடங்கி விட்டனர். இதனிடையே எந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா மற்றும் அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் இரண்டு அல்லது மூன்று பேர் எலிமினேட் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. அதன்படி இந்த வாரம் நிக்சன், அனன்யா மற்றும் கூல் சுரேஷ் ஆகிய மூன்று பேரும் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரால் ஓரளவுக்கு மேல் சுவரை ஏற முடியாததால் மணி உதவியுடன் கீழே இறங்கி விட்டார். அதன் பிறகு கூல் சுரேஷ் கன்ஃபெக்ஷன் ரூமுக்கு அழைத்து அவருடைய செயலை கண்டித்த பிக்பாஸ் அறிவுரை கூறினார். சிறிது நேரம் கதறி அழுத கூழ் சுரேஷ் இனி இது போன்ற செயல்களை செய்ய மாட்டேன் என கூறினார். பிக் பாஸ் வரலாற்றில் இதற்கு முன் முதல் சீசனில் பரணி இதுபோன்று சுவரையேறி குதித்து தப்ப முயன்ற நிலையில் தற்போது கூல் சுரேஷ் அந்த செயலை செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…