#image_title
தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார். பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து மிகப்பிரபலமானார் நடிகை ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை அவ்வளவு இனிதாக அமையவில்லை. தற்பொழுது இவர் தனது கணவரை விட்டு பிரிந்து தனித்து வாழ்ந்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு வலிமையான போட்டியாளராக ரச்சிதா மகாலட்சுமி இருந்தார் என்பதும் கடைசி நேரத்தில் தான் அதாவது 91 வது நாளில் தான் அவர் எவிக்சன் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வர தற்பொழுது படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி செய்த செயலுக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது இவர் முதியோர்கள், ஊனமுற்றோர்கள் வசிக்கும் அனாதை இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு அளித்து உதவி செய்துள்ளார். மேலும் அவர் அறம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரின் இந்த செயலை நெட்டிசன்கள் மனதார பாராட்டி வருகின்றனர். இதோ இதுதொடர்பான வீடியோ…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…